
ஜூலை 31-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் ரஜினியின் குசேலன் திரைப்படத்துக்கு முன்னோட்டமாக, குசேலன் விளம்பரங்கள் மற்றும் ரஜினியின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனி பஸ் ஒன்று ஒடவிடப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த பஸ்ஸை கொடியசைத்துத் துவக்கி வைத்தார் குசேலன் படத்தில் ரஜினியின் நாயகியாக நடித்துள்ள நயன்தாரா. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் பி.வாசு, தயாரிப்பாளர் புஷ்பா, அவரது கணவர் கந்தசாமி மற்றும் பிக் ஆடியோ நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ள பிக் மியூசிக் நிறுவனத்தின் கோடம்பாக்க அலுவலகத்திலிருந்து புறப்பட்ட அந்த பஸ் இன்று முதல் சென்னை மற்றும் புற நகர்களில் ஓடிக் கொண்டே இருக்கும். ரஜினி ரசிகர்கள் அனைவரும் இந்த பஸ்ஸில் ஏறி, தங்கள் தலைவரின் அரிய புகைப்படங்களைப் பார்த்து மகிழலாம்.
இந்த பஸ் தொடர்பான பல சிறப்புப் போட்டிகளையும் பிக் எஃப்எம் வானொலி தினசரி ஒலிபரப்ப உள்ளது. சரியாக பதில் சொல்வோருக்கு குசேலன் டிக்கெட் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என பிக் எஃப்எம் அறிவித்துள்ளது.
ரசிக மகா ஜனங்களே... ரெடி ஜூட்...!
Tags: tamil, cinema, kuselan, rajini, nayanthara, தமிழ், சினிமா, குசேலன், ரஜினி, நயன்தாரா
No comments:
Post a Comment